புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவின் திட்டத்தை எல்லா விதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும் - அமைச்சர் துரைமுருகன்

0 1320

கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டம் அறிவித்துள்ளதை ஏற்கமுடியாது என தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக் கொடுக்காது என குறிப்பிட்டுள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என அறிவித்தார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கேரள ஆளுநரின் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்றும் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என நீதிமன்றத்தின் ஆணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments