'நண்டுப் பெண்ணே'... இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் ராணுவ வீரர் மகள் சாதனை..!
சென்னையை சேர்ந்த ராணுவ வீரரின் 10 வயது மகள் 30 வினாடிகளில் நண்டு போல 81 முறை நடந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்
சென்னை வளசரவாக்கம் முரளிகிருஷ்னா நகரை சேர்ந்த ராணுவ வீரர் சீனிவாசன் - சங்கீதா தம்பதியரின் மகள் தீப்ஷிகா. 10 வயதான தீப்ஷிகா 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
தந்தை சீனிவாசனை போல உடற்பயிற்சியில் ஆர்வமிக்க சிறுமி தீப்ஷிகா நண்டு போல நடக்கும் முயற்சியை மேற்க் கொண்டார்.
மெதுவாக நண்டு நடப்பதை போன்று செய்வதே சற்று கடினமான வேலை என்ற நிலையில் வேகமாக ஓடும் நண்டு போல நடக்க பயிற்சி மேற்க் கொண்டு வந்தார்
தன்னுடைய விடா முயற்சியின் பலனாய் குறுகிய நேரத்தில் நண்டு போல விரைவாக நடக்கும் பயிற்சியை முடித்த அவர், இந்தியா புக் ஆப் ரெக்கார்டு அமைப்பிற்கு விண்ணப்பித்தார். 10 வயது சிறுமிகள் பிரிவில் 30 நொடியில் 81 முறை நடந்து புதிய சாதனை படைத்தார்.
மாணவி தீப்ஷிகாவின் சாதனையை அங்கீகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இருந்து மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து இ.எம்.இ ரெஜிமண்ட் கர்னல் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவி தீப்ஷிகாவை அழைத்து பாராட்டி கவுரவித்தனர்
தந்தையை போலவே தேசம் காக்கும் சேவை செய்ய ராணுவத்தில் இணைய விருப்பம் தெரிவித்த மாணவி தீப்ஷிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
விடாமுயற்சியுடன் முறையான பயிற்சி இருந்தால் எந்த ஒரு செயலும் சாத்தியம் தான் என்பதற்க்கு சிறுமி தீப்ஷிகாவே சாட்சி..!
Comments