முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மீண்டும் சர்ச்சை கருத்து
முல்லை பெரியாறு அணை குறித்து கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
152 அடி மொத்த உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 142 அடிக்கு நீர்த்தேக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர் தேக்க அளவை 152அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முல்லை பெரியாறு அணை நீர் தேக்க அளவு 136அடியாக குறைக்கப்படும் எனவும், முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும் எனவும் பேசியிருக்கிறார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments