குரூப் 2 மற்றும் 2A தேர்வு தேதிகள் அறிவிப்பு

0 3209

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் மே மாதம் 21-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் பாலச்சந்திரன், பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் மார்ச் 23-ந் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வுகள் மூன்று கட்டமாக நடத்தப்படும் எனவும் கூறினார்.

இந்த ஆண்டு மொத்தமாக 5,529 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. மே மாதத்தில் நடைபெறும் குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments