இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எகோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
காப்புரிமை சட்டத்தின் பிரிவு 14ல் "பதிப்புரிமை" என்பதன் பொருளை பரிசீலிக்க தனி நீதிபதி தவறிவிட்டார் என்று இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்று தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், புகாருக்குள்ளான நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Comments