கர்நாடக சட்டசபையிலேயே விடிய விடியத் தங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா... அமைச்சர் ஈஸ்வரப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்
அமைச்சரின் தேச விரோதக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் அவர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் நாற்காலிகளில் அமர்ந்து தூங்கியபடியும் தரையில் படுத்தும் இரவைக் கழித்தனர். தேசியக் கொடிக்கு பதிலாக காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியதைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, சபாநாயகர் உள்ளிட்டோர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து சமாதானப் பேச்சு நடத்திய போதும் இருதரப்பிலும் சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை.
Comments