அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ... 5.18 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பல்

0 1862

வடக்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகின.

கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அதிவேகமாகப் பரவத் துவங்கியது. இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து போயின. இது அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பின் 6 சதவீதம் ஆகும்.

வறண்ட கால நிலையின் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments