சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு திருவிழா.!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடை பெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறு நாள் 9-ந் தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும்.
17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.
Comments