கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்த முயன்ற 1,045 குழந்தைகள் மீட்பு - ஆர்.பி.எப். வீரர்கள்

0 1594

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் Operation Nanhe Fariste என்ற திட்டம் மூலம் ரயில் நிலையங்களில் கடத்த முயன்ற 344 சிறுமிகள் உள்பட ஆயிரத்து 45 சிறார்களை மீட்டதாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Mission Jeewan Raksha திட்டம் மூலம் ரயில் நிலையங்களில் தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏறத்தாழ 13ஆயிரம் ரயில்களில் பயணித்த முதியோர், கர்ப்பிணிகள், தனியாக பயணிக்கும் பெண்கள் உள்ளிட்டோருக்கு குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கடத்த முயன்ற நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து 87 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments