கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 சிறுவர்கள் உட்பட 28 பேர் மீட்பு.!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்திருந்த சிறுவர்கள் 14 பேர் உட்பட 28 பேரை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர்.
செல்லப்பம்பாளையம் பகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் வந்திருந்த தொழிலாளர் குழுவிடம், பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கர்நாடகாவைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவர் உதவியுடன், 28 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக வந்ததாகவும் இதில் 14 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, நேரில் சென்று வருவாய்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொழிலாளர்கள் அனைவரும் ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
Comments