உலகிலேயே மாசுபட்ட நதியாக பாகிஸ்தானின் ராவி ஆறு அறிவிப்பு.!
பாகிஸ்தானில் ஓடும் ராவி ஆறுதான் உலகிலேயே அதிகம் மாசுபட்ட நதி என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் உள்ள 258 நதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுத்து சோதனை செய்தது.
உலகளவில் ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் கால் பகுதிக்கும் மேலான இடங்களில் மேற்பரப்பு நீரில் உள்ள அசுத்தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் ஓடும் ராவி ஆற்றில் மாசின் அளவு லிட்டருக்கு 189 மைக்ரோ கிராம் அளவிற்கு இருப்பதாக யார்க் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments