உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமென கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது இஸ்ரேல் விவசாயியின் ஸ்ட்ராபெர்ரி

0 2914

இஸ்ரேல் விவசாயி விளைவித்த ஸ்ட்ராபெர்ரி பழம் உலகின் அதிக எடைகொண்ட பழமென கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

289 கிராம் எடையுள்ள எலன் வகை ஸ்ட்ராபெர்ரி பழம் சாதாரணமாக விளையக்கூடிய பழங்களை விட ஐந்து மடங்கு எடையுடன் விளைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானை சேர்ந்த விவசாயி விளைவித்த 250 கிராம் எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமே இதற்கு முன் உலகின் அதிக எடை கொண்ட பழமாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து இஸ்ரேல் விவசாயியின் எலன் வகை ஸ்ட்ராபெர்ரி பழம் புது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments