கச்சதீவு திருவிழா - இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.!

0 1783

இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் இந்த ஆண்டுக்கான திருவிழா இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் 500 பேர் மட்டும் பங்கேற்பது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் யாழ் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், தேவாலய திருவிழாவில் பாதிரியார்கள் மட்டும் பங்கேற்று திருவிழாவை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments