திருமணம் முடிந்து 17 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கருவுற்றிருந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு
ராணிப்பேட்டையில் 17 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கருவுற்றிருந்த கர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சோளிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியைச் சேர்ந்த அம்பிகா, 17ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கருவுற்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 14-ந் தேதி திடீரென காய்ச்சல் வந்து அம்பிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தாம் வழக்கமாக பரிசோதனைக்கு செல்லும் கொடைக்கல் மருத்துவமனைக்கே சென்ற அம்பிகாவுக்கு பாரசிட்டமல், அமாக்சிலின், சி.பி.எம். உள்ளிட்ட மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவை அனைத்தும் ஜனவரி மாதமே காலாவதியாகியிருந்தது. மீண்டும் மருத்துவமனைக்கு சென்று கேட்ட போது, அங்கிருந்தவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக சொல்லப்படும் நிலையில்,சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Comments