ஐதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது

0 1317
ஐதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது

நெட்பிளிக்சில் வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரால் ஈர்க்கப்பட்டு ஆட்கடத்தலில் ஈடுட்ட கும்பலை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி வெளியான அந்த தொடரால் கவரப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு பெண் உட்பட 4 பேருடன் இணைந்து ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் பூ வியாபாரம் செய்து வரும் பிரசாந்த் என்பவரை காணவில்லை என அவரது தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த சமயத்தில் பிரசாந்தின் சகோதரரை தொடர்பு கொண்டு கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.

இதை அடுத்து, செல்போன் சிக்னல் உதவியுடன் காவல்துறையினர் அந்த கும்பலை பிடித்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இதுபோல் 6 பேரை கடத்திய இக்கும்பல் 8 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments