லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் கையகப்படுத்தும் திட்டம் ரத்து
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய சுற்றுலாக் கழகத்திற்கு தொழிலதிபர் பழனி பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் 18 கோடி ரூபாயை செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதுடன், திவால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அந்நிறுவனத்தை வாங்க எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமம் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையக்கப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது.
ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, 423 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுப்பது நியாயமில்லை எனக்கூறி அப்பு ஹோட்டல்ஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதன் விசாரணையில், அப்பு ஹோட்டல்ஸ் வாதத்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஏற்றது.
Comments