தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது - தமிழக அரசு

0 1693
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நியூட்ரினோ துகள் மற்ற துகள்களுடன் இணைந்து, தனித்து செயல்பட்டால் எவ்விதமான வேதியியல் மாற்றத்தைத் தரும் என்பதை ஆய்வு செய்வதே நியூட்ரினோ திட்டமாகும்.

தேனி மாவட்டம் போடி அருகே மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில், மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக போடி மலை விளங்குகிறது என்பதால், மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகள் நடமாட்டம் பாதிக்கும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY