லயோலா கல்லூரியில் ஹிஜாபுக்கு தடை.. மாணவிகள் போராட்டம்..

0 5210
விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க  நிர்வாகம் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இரு மாணவிகள், தங்கள் வகுப்புகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

கல்லூரியில் பாரபட்சமில்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீறுடை என்ற விதி அமலில் இருக்கும் நிலையில் ஹிஜாப்பை அகற்றி விட்டு சீறுடையுடன்வந்தால் மட்டுமே வகுப்புகளுக்குள் செல்லவேண்டும் என்று கூறிய நிர்வாகம் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப்புடன் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டது. இதனால் அந்த இரு மாணவிகளும் கல்லூரிக்கு எதிரில் நின்று போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோரும் உறவினர்களும் கல்லூரி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலாவது ஆண்டு முதல் ஹிஜாப் அணிந்து வரும் தங்கள் குழந்தைகளை கல்லூரி நிர்வாகம் திடீரென்று ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுவது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் அனைத்து மாணவர்களை போல கல்லூரிக்குள் வந்தால் மட்டுமே அனுமதிக்க இயலும் என்று கறாராக கூறிய நிலையில் நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறி அந்த மாணவிகளை ஹிஜாப்புடன் கல்லூரிக்குள் அனுமதிக்க போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த இரு மாணவிகளும் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

இது போன்றா போராட்டம் மாநிலம் முழுவதும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments