வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு.. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

0 1202
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை பலப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை பலப்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்றோடு ஓய்ந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் மக்கள் வாக்களிக்க 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காலி மற்றும் உதவி செய்வதற்கு ஊழியர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கிருமிநாசினி, முககவசம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், பஞ்சு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 1 லட்சத்து 33 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 649 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்களுக்கு நாளை அதற்கான பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்த தேர்தலில் சுமார் 55 ஆயிரத்து 337 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.

இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி.. கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

80 ஆயிரம் காவலர்கள், 12 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும், முன்னாள் ராணுவத்தினர் 3 ஆயிரம் பேரும் தேர்தல் நாளன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments