வனத்துறையின் 1080 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புறப் பூங்கா அமைக்கும் நாகர்ஜுனா
தெலங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் வனத்துறையின் ஆயிரத்து எண்பது ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ள நடிகர் நாகர்ஜுனா, அதில் தனது தந்தை நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புறப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
பசுமை இந்தியா திட்டத்தில் வனத்துறை நிலங்களில் மரங்களை வளர்த்துப் பூங்காக்களை உருவாக்கத் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கிச்சேர்லா என்னுமிடத்தில் 1080 ஏக்கர் நிலத்தில் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புறப் பூங்கா அமைக்க நாகர்ஜுனா அடிக்கல் நாட்டினார்.
இங்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காகத் தெலங்கானா பசுமை நிதியத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்குவதாகவும் நாகர்ஜுனா உறுதியளித்துள்ளார்.
Comments