திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு செலவுக்கான பட்ஜெட் ரூ.3096 கோடி.. அறங்காவலர் குழு ஒப்புதல்

0 1940

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு செலவுக்காக 2022 -23 நிதி ஆண்டிற்கு 3096 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, 2021-22 நிதியாண்டில் 3000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது என்றார். வரும் நிதியாண்டில் 3 ஆயிரத்து 96 கோடி ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக கூறினார்.

திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச டிக்கெட் எண்ணிக்கையை படிப்படியாக அதிகப்படுத்தவும், திருமலையில் அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் வினியோகிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சுப்பாரெட்டி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments