யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?
யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
சளி, காய்ச்சல், தொண்டை வலி மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் கொண்ட நபர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2 சதவீதம் பேர் ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர்.
வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments