வங்கிகளில் 22,824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி; ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு
வங்கிகளில் 22,824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்தின் பேரிலும் அதன் முன்னாள் நிர்வாகிகள் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடியாக கருத்தப்படும் இவ்விவகாரத்தில் ஏற்கனவே சிபிஐ விசாரிக்கும் நிலையில், அமலாக்கத்துறையும் தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
சிபிஐ புகாரையும், தணிக்கை அறிக்கையையும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியபின் வழக்குப்பதிவு செய்ததாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், பண மோசடி, கடனாக பெற்ற பணத்தை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அடுத்தக கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
Comments