ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து, போலியான பணி நியமன ஆணை வழங்கியவர் கைது

0 928

தென்னக ரயில்வேயின் விளையாட்டு பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறியும், போலியான பணி நியமன ஆணை வழங்கியும் பலரிடம் பண மோசடி செய்த நபரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

தென்னக ரயில்வேயில் கபடி பயிற்சியாளராக பணிபுரியும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவன், வேலை வாங்கித் தருவதாக கூறி 43 நபர்களிடம் பணத்தை பெற்று, போலியான பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது.

வேலைக்காக ஜெயகாந்தனிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்து போன பரணிபுத்தூரைச் சேர்ந்த வினோத் என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இதே போல, சுமார் ஒரு கோடியே 70 லட்சத்துக்கும் மேல் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து, அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments