காவிரி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு இணைப்பு திட்டம் பற்றி மத்திய அரசு நாளை ஆலோசனை

0 2200
காவிரி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

காவிரி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

நீர் பற்றாக்குறையை தீர்க்கும் முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் தொடர்பாக டெல்லியில் நாளை மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஆலோசிக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நதி நீர் இணைப்பிற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments