தாயா இல்லை பேயா..? சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்..

0 1868
விருதுநகரில் இரண்டாவது திருமணத்திற்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, தனது ஒரே மகளான ஒரு வயது பெண் குழந்தையை 2லட்சத்து 40ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாயை கைது செய்த போலீசார், புகாரளித்த ஐந்து மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

விருதுநகரில் இரண்டாவது திருமணத்திற்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, தனது ஒரே மகளான ஒரு வயது பெண் குழந்தையை 2லட்சத்து 40ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாயை கைது செய்த போலீசார், புகாரளித்த ஐந்து மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

கே.செவல்பட்டியைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி - கலைச்செல்வி தம்பதி. கருப்பசாமி 6 மாதத்திற்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அதற்கு பிறகு கலைச்செல்வி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபரும் விட்டுவிட்டுச் சென்ற நிலையில், சொகுசு வாழ்க்கைக்கும், இரண்டாவது திருமணத்திற்கும் ஆசைப்பட்ட கலைச்செல்வி, குழந்தையை விற்று சொத்து, சுகத்துடன் வாழ நினைத்திருக்கிறார்.

இதற்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்த நிலையில், இடைத்தரர்கர்கள் மூலம் மதுரையைச் சேர்ந்த தம்பதிக்கு 2லட்சத்து 40ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர். குழந்தை வீட்டில் இல்லாததையும், முன்பின் பழக்கம் இல்லாதவர்கள் கலைச்செல்வி வீட்டுக்கு வந்து சென்றதையும் கவனித்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்த போலீசார், 5 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். குழந்தையை வாங்கிய தம்பதியையும் கைது செய்துள்ள போலீசார், இடைத்தரகர்கள் 6 பேரை கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments