9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக அளிப்பு..! தங்கையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அக்காள்
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், இறந்து போன தனது தங்கையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு சொந்தமான 9 கோடியே 20 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார்.
மயிலாப்பூரை சேர்ந்த ரேவதி என்பவரின் தங்கை பருவத அம்மாள் இளம் வயதில் இருந்தே உடல் ஊனமுற்றவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்ததுடன், கணித பேராசியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
76 வயதுடைய அவர் கடந்த மே மாதம் 2-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பாக தனது பெயரிலான சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் அக்காளிடம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பருவத அம்மாளின் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தேவஸ்தானம் திருப்பதியில் கட்டி வரும் குழந்தைகள் நல மருத்துவனைக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
Comments