தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. அமைப்பினர் மீது மேலும் ஒரு வழக்கு..

0 1566
தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட, பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைபைச் சேர்ந்த 12 பேர் மீது மேலும் ஒரு வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட, பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைபைச் சேர்ந்த 12 பேர் மீது மேலும் ஒரு வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 14-ந் தேதி திடீரென ஏ.பி.பி.வி. அமைப்பினர் ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் தங்களது முகவரியை தவறாகக் கொடுத்தது  விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து முகவரியை தவறாக கொடுத்த 12 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் புதிதாக மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments