ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்ததால் லிட்டில் பே கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைகள் மூடல்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிட்டில் பே கடலில் நீச்சலில் ஈடுபட்டிருந்த ஒருவர், சுறா தாக்கி நேற்று உயிரிழந்ததையடுத்து அந்த கடற்கரை உட்பட சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.
அந்நாட்டில் கடலில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்திருப்பது 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் லிட்டில் பே கடலில் உயிரிழப்பை ஏற்படுத்திய அந்த ஆக்ரோஷ சுறாவை ஆழ்கடல் நோக்கி திசை திருப்ப அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுறாவின் வருகை டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர் யார் என்பதை இன்னும் அதிகாரிகள்அடையாளம் காணவில்லை. இந்நிலையில் அவரைத் தாக்கிய சுறா 3 மீட்டர் நீளமுடைய வெள்ளைச்சுறாவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Comments