வாக்குச்சாவடி மையங்கள் நேரலை மூலம் கண்காணிக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

0 1829

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்னையிலுள்ள வாக்குச்சாவடி மையங்கள் நேரலை முறை மூலம் கண்காணிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை துவக்கி வைத்து பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், ஸ்டிக்கர் ஒட்டும் வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 5ஆயிரம் ரூபாய் வரை அவர்களது தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்றார்.

பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் வாக்குப்பதிவு நடைபெறும் 1,121 இடங்களில் live streaming மூலம் கண்காணிக்கவுள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments