தனியார் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் ஒதுக்கீடு - அரியானா அரசு ஆணை மீதான தடை நீக்கம்
அரியானாவில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் மாநில அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மாநில அரசின் ஆணையை எதிர்த்துத் தொழில் நிறுவனங்கள் தொடுத்த வழக்கில், பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி அரியானா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் போதிய காரணங்கள் இன்றித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதை ரத்து செய்தது.
இது குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டதுடன், அதுவரை தொழில் நிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.
Comments