நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு.! அனல்பறக்கும் பரப்புரை.!

0 1364

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுடையவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் மூர்த்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். 

35ஆவது திமுக வேட்பாளர் கல்யாண பத்திரிக்கை வடிவில் நோட்டீஸ் அடித்து வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாநகராட்சியின் 31ஆவது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்கள் பத்திர பேப்பர் வடிவில் வாக்குறுதிகளை அச்சடித்துக் கொடுத்தும், திமுக வேட்பாளர் கல்யாண பத்திரிக்கை வடிவில் வாக்குறுதிகளை அச்சடித்துக் கொடுத்தும் வாக்கு சேகரித்தனர்.

ஆட்டம் பாட்டத்துடன் வாக்கு சேகரிப்பு 

தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வீடு வீடாக சென்றும், பறை இசைத்தும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.

மேளதாளங்கள் முழங்க, வீடு, வீடாக, திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 110 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்..

சென்னையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 110வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, நடிகர் ராதாரவி திறந்தவெளி வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக அரசின் சாதனைகளை கூறி கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.. 

கரும்புடன் விவசாயி போல் வேடமணிந்த நபருடன் சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை 9வது மண்டலத்திற்கு உட்பட்ட 120 மற்றும் 121 வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், கரும்புடன் விவசாயி போல் வேடமணிந்த நபருடன் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் கே.என்.நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு

திருச்சி மாநகராட்சி 12வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நிர்வாக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பரப்புரை மேற்கொண்டனர்..

சென்னை மாநகராட்சியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தேர்தல் பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டில் பாஜக சார்பில் களம்காணும் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 139,140,142 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரடி பொம்மை உடையணிந்த நபர்களுடன் வீதிவீதியாக சென்று பிரசாரம்

திண்டுக்கல் மாநகராட்சியின் 41வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர், கரடி பொம்மை உடையணிந்த நபர்களுடன் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments