பெண்ணிடம் வம்பிழுத்து, தாக்கிய புகாரில் அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணன் கைது..!

0 5117

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன், பெண் ஒருவரிடம் வம்பிழுத்து, அவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குழுமூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் செந்தில் - வசந்தி தம்பதி. சில நாட்களுக்கு முன் வசந்தி வீட்டுக்கு முன் தெருவில் நின்றிருந்த போது, அனிதாவின் இரண்டாவது அண்ணன் அருண்குமார், வசந்தியை அச்சுறுத்தும் வகையில் பைக்கை ஓட்டி வந்து வம்பிழுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அருண்குமார் பல முறை இவ்வாறு நடந்து கொண்டிருந்ததால், இது குறித்து தனது கணவரிடம் கூறியிருக்கிறார் வசந்தி. ஆத்திரமடைந்த செந்திலும் அருண்குமாரை தட்டிக்கேட்கவே, பதிலுக்கு அருண்குமார் செந்தில் - வசந்தி தம்பதியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த செந்துறை போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY