’உ.பி விபத்து இதயத்தை உலுக்குகிறது’ கிணற்றில் விழுந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்

0 2323

உத்திரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் திருமணத்திற்கான கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த விபத்து இதயத்தை உலுக்குவதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் மோடி தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

நெபுவா நவுராங்கியா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது கிணற்று ஸ்லாப்பின் மீது ஒரே நேரத்தில் பலர் அமர்ந்திருந்ததால் பாரம் தாங்காமல் பலகை உடைந்து விழுந்ததில் 13 பெண்கள் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments