பிரபல ரவுடி படப்பை குணா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0 2155

நன்னடத்தை விதிமீறல் புகாருக்கு உள்ளான ஸ்ரீபெரும்புதூர் ரௌடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரௌடி குணா, திருந்தி வாழ வாய்ப்பு வழங்குமாறு உறுதியளித்து,  நன்னடத்தை பிணை பெற்று வெளியே வந்தான். வெளியே வந்த பிறகு மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசார் அவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், போலீசாருக்கு பயந்து தாமாகவே வந்து சரணடைந்த ரௌடி படப்பை குணாவை, விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ரௌடி படப்பை குணா மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நன்னடத்தை விதியை மீறியதாலும், பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments