குஜராத்தில் மழலையர்ப் பள்ளிகள் மீண்டும் திறப்பு

0 1252

கொரோனா சூழலுக்குப் பின் குஜராத் மாநிலத்தில் மழலையர்ப் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா சூழலைக் காரணம் காட்டி மழலையர்ப் பள்ளிகள் மூடப்பட்டன. இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பெரும்பாலான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மழலையர்ப் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தனர். பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதால் மகிழ்ச்சியடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments