தேர்தல் வாக்குறுதி என்பது மலை ஏறுவது போல் படிப்படியாகத் தான் ஏற வேண்டும் - ப.சிதம்பரம்
தேர்தல் வாக்குறுதி என்பது மலை ஏறுவது போல் படிப்படியாகத் தான் ஏறவேண்டுமம் என்றும், குரங்கு போல் தாவ முடியாது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகதான் நிறைவேற்ற முடியும் என்றார்.
குடும்பத் தலைவிகளின் பெயரில் வங்கிக் கணக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அந்தப் பணிகள் முடிந்த உடன் ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்திற்குள் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Comments