தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு... அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7254 இடங்கள் நிரம்பின

0 7445

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கு நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7 ஆயிரத்து 254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 800 இடங்களும், பல் மருத்துவக்கல்லூரியில் ஆயிரத்து 457இடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 7ஆயிரத்து 254 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளதாகவும் பல் மருத்துவப் படிப்புக்கு மட்டும் 3 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments