மியான்மரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு

0 1474

மியான்மரில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார்.

சாகாயிங் என்ற இடத்தில் போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த போர் விமானம் அதே பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி உயிரிழந்ததாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக மியான்மர் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments