தண்ணீர் கேனில் தலையை விட்டு சிக்கிய சிறுத்தை..! இரை தேடி ஊருக்குள் வந்த பரிதாபம்

0 3620

காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை குட்டி ஒன்று வீட்டிற்கு வெளியே கிடந்த பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலையை நுழைத்து சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. தெரு நாய்களை வேட்டையாட ஊருக்குள் வந்த சிறுத்தை கேனில் சிக்கி நொந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிகின்றது இந்த செய்தி தொகுப்பு..

நள்ளிரவில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் இறைதேடி வந்த சிறுத்தை ஒன்று, தலையில் சிக்கிய தண்ணீர் கேனுடன் சாலைக்கு வந்துள்ளது.

கேனுக்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையை, அந்தவழியாக வாகனத்தில் சென்றவர்கள் செல்போன் கேமராவில் பதிவு செய்தனர்.

காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டதும், அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் , மகாராஷ்டிர மாநில வனத்துறையினர் நடத்திய விசாரணையில் 12 ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோவில் காணப்படும் இந்த குட்டி சிறுத்தை மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் உதவியுடன் 48 மணி நேரம் போராடி அந்த சிறுத்தை குட்டியை வலைவிரித்து பிடித்த வனத்துறையினர் அந்த பிளாஸ்டிக் கேனை பாதுகாப்பாக அகற்றினர்.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களை வேட்டையாடுவதற்காக இந்த குட்டிச்சிறுத்தை ஊருக்குள் புகுந்திருக்கலாம் என்று கூறும் வனத்துறை அதிகாரிகள், தாகத்திற்காக தண்ணீர் கேனுக்குள் தலையிட்டதால் காட்டுக்குள் செல்ல இயலாமல் ஊருக்குள் சுற்றியதாகவும், அதன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கேனை வெட்டி எடுத்து, மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியை பத்திரமாக காட்டுக்குள் விடுவித்ததாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments