வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்த ஆசிரியர்.. கத்தியால் குத்திய மாணவன்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது செய்யப்பட்டான்.
அமராவதிப் புதூரில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஜாய்சன் என்பவன் இயந்திரவியல் முதலாமாண்டு படித்து வந்தான்.
ஜாய்சன் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்துவதைப் பார்த்த ஓவிய ஆசிரியர் ராஜ ஆனந்த் என்பவர் செல்போனைப் பிடுங்கி பயிற்சி மைய முதல்வரிடம் கொடுத்துள்ளார்.
ஜாய்சனின் பெற்றோரை வரவழைத்த முதல்வர், அவனது பல செயல்பாடுகள் மற்ற மாணவர்களையும் கெடுக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, பயிற்சி மையத்திலிருந்து அவனை நீக்குவதாகக் கூறியுள்ளார். பெற்றோர் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து ஜாய்சன் மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நடந்த சம்பவங்களை அவமானமாகக் கருதிய ஜாய்சன், வகுப்பறைக்குக் கத்தியுடன் சென்று ஆசிரியர் ராஜ ஆனந்த்தின் உடலில் 5 இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளான். காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜாய்சனை போலீசார் கைது செய்தனர்.
Comments