சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் அலுவலகங்களில் இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டையடுத்துச் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் டெல்லி, குருகிராம், பெங்களூரில் அலுவலகங்களில் இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நேற்று ஒரே நேரத்தில் மூன்று இடங்களிலும் வருமான வரி அதிகாரிகள் ஆய்வைத் தொடங்கினர். இரண்டாம் நாளாக இன்றும் ஆய்வு நீடித்து வருகிறது. இது குறித்து ஹுவேய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நிறுவன அதிகாரிகளைச் சந்திக்க வருமான வரி அதிகாரிகள் வருவது குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டுத் தான் இந்தியாவில் தங்கள் செயல்பாடு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன் விதிமுறைப்படி முழு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Comments