அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்க வலியுறுத்தி ஆப்கான் மக்கள் பேரணி..
அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள 67,500 கோடி ரூபாய் சொத்துக்களை விடுவிக்க வலியுறுத்தி ஆப்கான் மக்கள் பேரணி சென்றனர்.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதும் அந்நாட்டு மத்திய வங்கிக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த 67,500 கோடி சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியது.
அதில் இருந்து 26,250 கோடி ரூபாயை நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை கண்டித்து தலைநகர் காபூலில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் முன் மக்கள் பேரணி சென்றனர்.
Comments