வீட்டின் அறையில் உள்பக்கமாக கதவை தாழிட்டு மாட்டிக்கொண்ட 7 வயது சிறுமி பத்திரமாக மீட்பு
சென்னை விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அறையில் உள்பக்கமாக கதவை தாழிட்டு திறக்க முடியாமல் தனியாக மாட்டிக்கொண்ட 7 வயது சிறுமியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குடியிருப்பு கட்டடத்தின் 3-ஆவது மாடி வீட்டில் வசிக்கும் சிறுமியின் பெற்றோர், சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,வீட்டின் அறையில் உள்பக்கமாக தாழிட்டு திறக்க முடியாமல் வெகு நேரமாக அந்த சிறுமி பயத்தில் அழுதுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்க முயற்சி செய்ததுடன், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர் வந்தும் கதவை திறக்க முடியாமல் போகவே தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட ஏணியைக்கொண்டு பால்கனி வழியாக வீட்டின் அறைக்குள் சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
Comments