சத்தியமங்கலம் ஆதி கருவண்ணராயர் கோயிலுக்குச் செல்ல 100 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
மாசி மகத்தை முன்னிட்டு, சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோயிலுக்குச் செல்ல 300 க்கும் மேற்பட்ட கார்களில் பக்தர்கள் வந்த நிலையில், 100 வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி அளித்ததால், பக்தர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலில் வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், வனத்துறையினர் நூறு நூறு வாகனங்களாக கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கி வந்தனர். காராச்சிக்கொரை சோதனைச்சாவடி அருகே காத்திருப்புக்கு உட்படுத்தப்பட்ட பக்தர்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments