தேர்தல் பிரச்சாரத்துக்காக அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் இருந்து பெற வேண்டும் - உயர் நீதிமன்றம்
சென்னையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் இருந்து பெற வேண்டும் என மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை 117ஆவது வார்டில் தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாகக் கூறி, கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதியின்றி போஸ்டர் ஒட்டத் தடை உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட அனுமதிக்கக் கூடாது எனச் சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப் பதியவும் உத்தரவிட்டனர்.
Comments