ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 2586

ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை லட்சம் படைவீரர்களை ரஷ்யா உக்ரைன் மற்றும் பெலாரசை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவிரும்பவில்லை என்ற போதும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் ஜோபைடன் எச்சரித்தார்.

போர் மூண்டால் சர்வதேச அளவில் ரஷ்யா கடும் கண்டனத்தை சந்திக்க நேரிடும் என்றும் பெரும் பொருட்சேதம் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றும் ஜோ பைடன் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் பாதிப்பு அமெரிக்காவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் எதிரொலிக்கும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments