ஹைதராபாதில் பட்டப்படிப்பு போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்.!
ஹைதராபாதில் பட்டப்படிப்பு போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
போபாலில் உள்ள சர்வேபல்லி ராதாகிருஷ்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரியைப் பூர்த்தி செய்யமுடியாத மாணவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களை குறிவைத்து மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த இந்த கும்பல் போலியான சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கியதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Comments