இதற்கு பெயர் தான் தனித்து போட்டி : தேமுதிகவின் பரிதாபம்... வள்ளலின் கட்சி வறண்ட சோகம்.!
திருச்சி மரக்கடையில் தேமுதிக சார்பில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு தொண்டர் கூட இல்லாத நிலையில் கட்சியின் பேச்சாளர் மட்டும் தனியாக நின்று மேடையில் பேசிவரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மரக்கடை சந்திப்பு பகுதியில் தேமுதிக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக நீண்ட லாரி டிரைலர் கொண்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடை மீது நின்று தேமுதிக பிரச்சாளர் ஒருவர், 'சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்' என்று விரக்தியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அவரது பேச்சைக் கேட்க அவரை தவிர எந்த ஒரு தொண்டரும் அங்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து அங்குள்ள நிர்வாகிகளிடம் விசாரித்த போது, தங்கள் கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் அதில் கட்சியினர் எவரும் இல்லை என்றும் பிரேமலதா கலந்து கொண்டு பேசும் போது ஏராளமான தொண்டர்கள் அங்கு கூடி இருந்ததாகவும் விளக்கம் அளித்தனர்.
Comments