ரூ.22,842 கோடி மோசடி - கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை பிடிக்க சிபிஐ தீவிரம்
22,842 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குஜராத் கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
சூரத்தில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வரும் ஏ.பி.ஜி. நிறுவனத்தின் மீது கடந்த 2019ஆம் ஆண்டு சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 28 வங்கிகளில் கடன் பெற்று ஏ.பி.ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியாக இது கருதப்படும் நிலையில், நிறுவனத்தின் இயக்குநர்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்கும் நோக்கில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments